News January 25, 2026

ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 04242210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

Similar News

News January 26, 2026

சென்னிமலை அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

image

சென்னிமலை அருகே 14வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தாய் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமி 22 வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், கடந்த ஜூன் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர்(19) என்ற வாலிபர், சிறுமியை மிரட்டி நள்ளிரவில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது. இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீஸார் வாலிபர் கைது செய்தனர்.

News January 26, 2026

ஈரோடு அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

image

பவானிசாகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பவானிசாகர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எரங்காட்டூர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். மேலும் கடை உரிமையாளர் தாஹிரா பானு என்பவரை கைது செய்த போலீசார், 4000 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

News January 25, 2026

ஈரோடு: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.<> E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். (SHARE it)

error: Content is protected !!