News January 25, 2026
வேலூர் மக்களே! OTP வருதா? ALERT!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
Similar News
News February 6, 2026
வேலூர் கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் – 2030, கருத்துகேட்பு கூட்டம் இன்று (பிப்.6) நடந்தது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். இதில் எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News February 6, 2026
வேலூர்: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <
News February 6, 2026
வேலூருக்கு புதிய SP நியமனம்!

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை SP ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் சிவராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்.6) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


