News May 7, 2024
இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்திப் படங்களை இயக்கிய ஓம்சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். MGR நடித்த ‘இதயக்கனி’, சிவாஜி நடித்த ‘சிரஞ்சீவி’ உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு, சுமலதா நடித்த ‘திசை மாறிய பறவைகள்’ படத்தை இயக்கியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றார். ஜெகதீசனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன Kutty Story..

ஒரு ராஜா தளபதியை தேர்ந்தெடுக்க 10 பேரிடம் விதைகளை கொடுத்தார். அதில் ராஜாவை ஏமாற்ற நினைத்த 9 பேர் வேறு விதையை மரமாக வளர்த்து கொண்டுவந்தனர். ஆனால் அந்த ராஜா விதையோடு வந்த ஒருவனை தான் தளபதியாக தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் அவர் கொடுத்த விதைகள் வேகவைக்கப்பட்டவை, அது வளராது என கூறி கதையை முடித்துக்கொண்ட விஜய், உண்மையான ஒருவரையே தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
News August 21, 2025
SPACE: ஜூபிடரில் உள்ள RED DOT மர்மம்..என்ன தெரியுமா?

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளின் மேற்பரப்பில் ஒரு தனித்துவமான சிவப்பு புள்ளியை நாம் கண்டிருப்போம். இதை என்னவென்று நீங்கள் யோசித்தது உண்டா? வியாழனில் அமைந்துள்ள இந்த சிவப்பு புள்ளி ஒரு சாதாரண புள்ளி அல்ல. இது 350 நூற்றாண்டுகளுக்கு மேலாக சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சுழல் என்கின்றனர் விஞ்ஞானிகள். இச்சுழல் சுமார் 16,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் கொண்டது. SHARE.
News August 21, 2025
கவர்னருக்கு காலக்கெடு கூடாது… மத்திய அரசு வாதம்

ஜனாதிபதி, கவர்னருக்கு <<17154106>>காலக்கெடு<<>> விதிப்பது தொடர்பான வழக்கு இன்று SC-யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாதிக்கப்பட்ட மாநிலம் கோர்ட்டை அணுகினால், கோர்ட் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?’ என CJI கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல், ‘அனைத்து பிரச்னைக்கும் நீதிமன்றமே தீர்வு அல்ல. அரசியல் சாசன அதிகாரிக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை’ என்று பதிலளித்தார்.