News January 25, 2026

ஜன நாயகன்.. காலையிலேயே வந்த மகிழ்ச்சி செய்தி

image

‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகவுள்ளது. ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால், பிப்ரவரி 2-வது வாரத்திலோ (அ) மார்ச் முதல் வாரத்திலோ படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இது விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழகம் அதிர மாநிலம் முழுவதும் 1,000 தியேட்டர்களில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Similar News

News February 3, 2026

UPIல் தவறாக பணம் அனுப்பி விட்டால் திரும்ப பெற…

image

UPI-ல் தவறான பரிவர்த்தனை செய்துவிட்டால், <>NPCI <<>>இணையதளத்தில் புகார் அளிக்கலாம் *UPI complaint-ல் Transaction-ஐ தேர்வு செய்யவும் *Select issue type-ல், Incorrectly transferred to another account-ஐ தேர்ந்தெடுக்கவும் *தகவல்களை சரியாக கொடுத்தால், விசாரணைக்கு பின் பணத்தை பெறலாம் *ஆனால், இதற்கு பணம் பெற்றவரின் அனுமதி அவசியம் *அவர்கள் தர மறுத்தால், வங்கியில் புகார் அளித்தே பணத்தை திரும்ப பெற முடியும்.

News February 3, 2026

சஸ்பென்ஸ் வைக்கும் வைகோ

image

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகளை நாங்கள் என்றைக்கும் வைக்கவே இல்லை என வைகோ தெரிவித்துள்ளார். அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்ற அவர், மீண்டும் 2026-ல் ஸ்டாலின் CM ஆக அமர்வார் என்றார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் எனவும் அதுவரை எத்தனை தொகுதிகள் கேட்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது எனவும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

News February 3, 2026

திமுகவில் கூண்டோடு இணைந்தனர்.. EPS அதிர்ச்சி

image

கொங்கு & மேற்கு மண்டலத்தை தன்வசமாக்கும் முயற்சியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் தெற்கு நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் சரவணகுமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது, கொங்கு மண்டலத்தை தன் கோட்டையாக கருதும் EPS-க்கு (அதிமுக) அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரம், திமுக, தவெகவும் கொங்கு மண்டலத்தில் அதிக கவனம் வைத்துள்ளனர்.

error: Content is protected !!