News January 25, 2026
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 இன்று கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. முதல் டி20-ல் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், புதிய உத்திகளுடன் NZ களமிறங்கவுள்ளது.
Similar News
News April 3, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் முழு ஆண்டு தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல், தேர்தலையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஏப்.6 முதல் 10 வரை விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
News April 3, 2026
அண்ணாமலைக்கு வாய்ப்பு தராதது ஏன்? பியூஷ் கோயல்

அண்ணாமலைக்கு தேர்தலில் சீட் ஒதுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தொகுதி என்றில்லாமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற அண்ணாமலை விரும்பியதாக பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வேட்பாளர்களின் விருப்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
News April 3, 2026
மாம்பழத்திற்கு எதிராக களமிறங்கும் G.K.மணி மகன்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., – பாமக இடையே 3 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில், பாமகவின் பாடி செல்வத்தை எதிர்த்து காங்., சார்பில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் களமிறங்குகிறார். மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து காங்., சின் ஜமால் யூனுஸ் முகமது, சோளிங்கரில் சரவணனை எதிர்த்து முனிரத்னம் மோத இருக்கின்றனர்.


