News January 25, 2026
திருச்சி: கொலை வழக்கில் நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி பாராட்டினார்.
Similar News
News April 7, 2026
திருச்சி: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
திருச்சி: ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

ஈரோட்டில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படும் ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஏப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஈரோடு – திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 7, 2026
BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்டவற்றில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து அவர் மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரின் வேட்புமனு திருச்சி கிழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


