News January 24, 2026
12 நாளில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்

காதல் திருமணம் செய்த 12-வது நாளிலேயே இளம் டாக்டர் ஜீவிதா(25) சோக முடிவை எடுத்துள்ளார். கோவையை சேர்ந்த அவர், வீட்டை விட்டு வெளியேறி ஜன.11-ல் அபிஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து, திருமணம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்த ஜீவிதா, வேலை கிடைக்காத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இல்லறம் இனிக்கவில்லை. அதனால், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
Similar News
News February 14, 2026
தலகாணிய வச்சி முடிச்சிடுங்க.. விஜயபாஸ்கர் பேச்சு

காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க, ஆனால் ஓட்டு இரட்டை இலைக்கு தான் போடணும் என்று Ex அமைச்சர் C விஜயபாஸ்கர் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், உங்கள் அருகிலுள்ள வீடுகளில் பாட்டிகள் இருந்தால், அவர்களை கரெக்ட் பண்ணிடுங்க. இல்லனா தலகாணி வச்சி முடிச்சிடுங்க, கணக்கு வழக்கை (வாக்கு) கூறினேன் என்று பேசியது கவனம் பெற்றுள்ளது.
News February 14, 2026
FLASH: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கார் விபத்து!

சென்னையில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதி கவிழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில், படுகாயமடைந்த துக்ளக் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 14, 2026
விலை ஒரேநாளில் தாறுமாறாக குறைந்தது

தக்காளி, வெங்காயத்தை தவிர்த்து நாம் எவ்வித சமையலையும் அவ்வளவு சுவையாக செய்திட முடியாது. எனவே, அதற்கு மவுசு அதிகம். ஆனால், தற்போது வரத்து அதிகரிப்பால் நாளுக்கு நாள் விலை குறைந்துகொண்டே வருகிறது. 1 கிலோ ₹20 – 25 வரை விற்ற வெங்காயம் இன்று ₹15-க்கே விற்பனையாகிறது. தக்காளியும் 1 கிலோ ₹10 – ₹12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் படுகுஷியில் உள்ளனர்.


