News May 7, 2024

கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

image

ஊத்தங்கரை பகுதியில்
கடுமையான கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பெரிய தள்ளப்பாடி,
அனுமன் தீர்த்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

Similar News

News January 17, 2026

கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

image

கிருஷ்ணகிரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

image

அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக நேற்று முன்தினம் இரவு பெங்களூரை சேர்ந்த குமார் & நவின்குமார் ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், நவின்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

கிருஷ்ணகிரி: பதற்றத்தால் பறிபோன உயிர்!

image

மத்தூரை அடுத்த மூக்கா கவுண்டனூரை சேர்ந்தவர் பிரபாகரன் (21). இவர் நேற்று முன்தினம் பைக்கில் கொடமாண்டபட்டி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் பைக்கில் சென்ற நபர் எந்தவித சிக்னலும் போடாமல் திரும்பியதால், பதற்றத்தில் பிரபாகரன் முன்னே சென்ற வேறு வாகனம் மீது மோதினார். இதில் பிரபாகரன் உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!