News January 24, 2026
உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து ஆட்சியர் நேரில்

சின்னசேலம் ஒன்றியம் குதிரைச்சந்தல் கிராமத்தில் உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கைப்பேசியில் உள்ள செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் (ஜன.24) ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News February 18, 2026
கள்ளக்குறிச்சியில் EB பில் எகிறுதா..?

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 18, 2026
கள்ளக்குறிச்சி: மனைவியை கத்தியால் கிழித்த கணவர்

கள்ளக்குறிச்சி, பீளமேட்டை சேர்ந்தவர் அப்துல்ஜப்பார் (50), அவரது மனைவி பாத்திமா (45) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பாத்திமா கணவரை பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமாவை அப்துல்ஜப்பார் ஆபாசமாக திட்டி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அப்துல்ஜப்பார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
News February 18, 2026
கள்ளக்குறிச்சி: சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

சின்னசேலம், அம்மையகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மகன் விக்னேஷ் (26), இவரும் தியாக துருகம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நல அலுவலர் குப்புவள்ளி விசாரித்தபோது, தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


