News January 24, 2026

FLASH: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த வாரமே வாங்கி இருந்தால் உங்களுக்கு ₹11,760 மிச்சமாகி இருக்கும். ஆம், ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 1 சவரன் தங்கத்தின் விலை ₹1,06,240 ஆக இருந்தது. மறுபுறம், வெள்ளி விலையும் ஒரே வாரத்தில் ₹55,000 அதிகரித்து, 1 கிலோ ₹3.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News March 21, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வு!

image

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சுதிப்தா பால் சௌரப் துபே, பிரபாகர் பிரகாஷ் ரஞ்சன் ஆகியோர் நேற்று(மார்ச் 20) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை (MCMC) ஆய்வு செய்தனர்.

News March 21, 2026

பள்ளிகளுக்கு 8 நாள்கள் கூடுதல் விடுமுறை

image

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8 நாள்கள் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முன்கூட்டியே தேர்வு முடிவடைவதால், ஏப் 17-ம் தேதியே கோடை விடுமுறை தொடங்குவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 21, 2026

LJK இணைந்ததால் கூட்டணிக்கு பலம்: ரங்கசாமி

image

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் LJK-வை NDA கூட்டணியில் இணைப்பதற்கு புதுச்சேரி CM ரங்கசாமி மறுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரே NDA கூட்டணியில் LJK இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். LJK இணைந்தால் கூட்டணிக்கு பலம் என்று மோடி, அமித்ஷா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, இக்கூட்டணியில் NR காங்., – 16, பாஜக – 10, அதிமுக, LJK கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!