News May 7, 2024

திண்டுக்கல் மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் கீழ் இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு அசோக் நகர் பகுதியில் நிலத்தடி நீர் குழாய் சரிபார்த்து சின்டெக்ஸ் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் சின்டெக்ஸ் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News July 6, 2025

பாலத்தில் கார்கள் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

image

காரைக்குடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (29). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே அப்பாஸ்புரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார்கள் சாலையோரத்தில் இருந்த பாலத்தில் அடுத்தடுத்து மோதி நின்றது. இதில் காரில் வந்த 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை.

News July 6, 2025

மாற்றுத்திறனாளிகள், முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் & முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் 07.07.2025 குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, 08.07.2025 பழனி சிவகிரிப்பட்டி எஸ்கேஎம் மஹால், 09.07.2025 தொப்பம்பட்டி வீரகுமார் திருமண மண்டபம். 10.07.2025 அன்று வேடசந்தூர் சினேகா மஹால், 11.07.2025 வத்தலகுண்டு ஏஎம்எஸ் மஹால், 12.07.2025 திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

News July 6, 2025

திண்டுக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 5 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

error: Content is protected !!