News May 7, 2024
கரைசுத்துபுதூரில் போலீசார் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 7) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 31, 2025
நெல்லையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநகர மற்றும் ஊரக காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகரத்தில் 500 காவல் துறையினரும், மாவட்டத்தில் 1500 காவல்துறையினரும் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.
News December 31, 2025
நெல்லை: சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் பணி

நெல்லை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 15 சமையல் உதவியாளர் பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தகுதியான பெண்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பெண்கள் ஜன.3 முதல் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT
News December 31, 2025
நெல்லை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


