News January 24, 2026

அலர்ட்.. 8 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

5-வது T20: இந்திய அணி பேட்டிங்

image

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து சொதப்பிவரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்சர் படேல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 3-ல் வெற்றிபெற்று இந்திய அணி ஏற்கெனவே தொடரை கைப்பற்றியுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்திலும் இந்தியா வெல்லுமா?

News January 31, 2026

H.ராஜாவுக்கு பக்கவாதம்.. அப்போலோ அறிக்கை

image

H.ராஜா உடல்நிலை குறித்து அப்போலோ ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று திடீரென்று ஏற்பட்ட பக்கவாத பாதிப்பால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கவாத பாதிப்பில் இருந்து குணமடைந்து வரும் அவர், குடும்பத்தினருடன் பேசி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

image

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.

error: Content is protected !!