News January 24, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை, மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை ₹560 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,040 உயர்ந்துள்ளது. இதனால் ஒரேநாளில் கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹14,750-க்கும், சவரனுக்கு ₹1600 உயர்ந்து ₹1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News February 9, 2026
பிராக்டிக்கல் Exam தொடங்கியது.. அமைச்சர் ஆய்வு

+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு(Practical) இன்று தொடங்கியது. இந்த ஆண்டு 7,99,892 மாணவ, மாணவிகள், 26,441 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.26 லட்சம் பேர் எழுதுகின்றனர். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வுகளை எழுதி ஆய்வகங்களில் மாதிரியை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
News February 9, 2026
செல்வப்பெருந்தகைக்கு எதிராக பொங்கிய விசிக!

கூட்டணி நிலைப்பாட்டை VCK மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரிகமற்ற அணுகுமுறை என செல்வப்பெருந்தகைக்கு MLA பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று தனியார் TV நேர்காணலில் பேசிய செல்வப்பெருந்தகை, கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ், திருமாவளவன் இருவரும் அமர்ந்து பேச வேண்டும் எனவும், திமுக தலைமையே கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறியிருந்தார். இது விசிகவினரை அப்செட் ஆக்கியுள்ளது.
News February 9, 2026
கல்லூரி மாணவிகளின் ஆபாச படங்கள்.. சிக்கினார்!

AI பல நன்மைகளை தந்தாலும், சிலர் தீய செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். கோவையில் கல்லூரியில் படிக்கும் 24 மாணவிகளின் ஆபாச போட்டோக்கள் SM-ல் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் களத்தில் குதித்த போலீசார், அதே கல்லூரியை சேர்ந்த 3-ம் ஆண்டு மாணவனை அதிரடியாக கைது செய்துள்ளனர். தனது காதலி மூலம் மாணவிகளின் போட்டோக்களை பெற்று இந்த கொடூரத்தை அந்த மாணவன் செய்துள்ளான். பெண்களே உஷார்.


