News January 24, 2026
தமிழில் தெரியாத ஒரே வார்த்தை ’பயம்’: சீமான்

வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன் என சீமான் கூறியுள்ளார். வெற்றியடைந்தால் இருப்பேன் தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை என்று பேசிய அவர், தங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து ’பயம்’ என பேசியுள்ளார். மேலும், தங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து ’வீரம்’ எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News February 4, 2026
‘குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக ஆட்சிக்கு வராது’

தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, தினமும் ஒரு வெற்று அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவதாக அன்புமணி சாடியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா புழக்கம், மின் கட்டண உயர்வு என திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியே என்று அன்புமணி கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக, இம்முறை என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வர முடியாது என விமர்சித்துள்ளார்.
News February 4, 2026
SPORTS 360°:பில்லியர்ட்ஸில் பங்கஜ் அத்வானி அசத்தல்

*இலங்கைக்கு எதிரான 3-வது டி20-ல் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி *U19 உலகக் கோப்பை கிரிக்கெட்டின், முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் *சர்வதேச ஸ்குவாஷில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அனாஹத் சிங் தேர்வு *ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பங்கஜ் அத்வானி முன்னேறியுள்ளார்
News February 4, 2026
உச்சத்தை தொட்ட இந்தியா – சீனா வர்த்தகம்!

இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 2025-ல் ₹13,000 கோடியை எட்டியுள்ளதாக சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் தெரிவித்துள்ளார். இது இதுவரை இல்லாத அளவிலான உச்சபட்ச சாதனை என கூறியுள்ள அவர், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனா ஆதரவளிப்பதாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தியாவுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் சூ தெரிவித்துள்ளார்.


