News January 24, 2026

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 31, 2026

சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று (ஜன.31)ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அரசின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

FLASH: சின்னசேலத்தில் பயங்கர விபத்து!

image

சேலம் மாவட்டம் புளியங்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன், சின்னசேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, வாசுதேவனூர் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!