News May 7, 2024
மயிலாடுதுறை அருகே விற்பனை தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஆங்காங்கே நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் நுங்கு விற்பனை செய்யும் இடங்களில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் வெயிலில் தாக்கத்திலிருந்து அதிக அளவில் நுங்கு வாங்கி செல்கின்றனர். இதனால் நுங்கு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை: இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் மழை சேதம் தொடர்பான புகார்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் உங்கள் மொபைல் போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை யாராவது தொடர்பு கொண்டு கேட்டால் யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
News November 28, 2025
மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


