News May 7, 2024
விசாரணையில் ரூபி மனோகரன் திணறல்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணையில், அக்கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரன் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். தனியார் இடத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜரான அவரிடம், மரண வாக்குமூல கடிதம் குறித்தும், இருவருக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உரிய பதிலளிக்க முடியாத அவர், ஜெயக்குமார் மரணத்தில் இருந்துதான் மீண்டு வரவில்லை என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
500 விக்கெட்கள்.. ஷகிப் அல் ஹசன் மைல்கல் சாதனை

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் டி20 போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடிவரும் அவர், இன்று இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் இதற்கு முன்பு ரஷித் கான், பிராவோ, சுனில் நரைன், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். அதிகபட்சமாக ரஷித் கான் 660 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 25, 2025
திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
News August 25, 2025
ராசி பலன்கள் (25.08.2025)

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.