News January 24, 2026
கிருஷ்ணகிரி பெற்றோர் கவனத்திற்கு!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். *மறக்காம ஷேர் பண்ணுங்க*
Similar News
News February 4, 2026
ALERT: கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

ஓசூர் மற்றும் சிபிகட் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை சிப்காட் இரண்டாம் கட்டம், பாதாளப்பள்ளி, குமுதேப்பள்ளி மற்றும் வெல்ஃபிட் சாலை, டிவிஎஸ் நகர், அந்திவாடி, மாதிகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைப்பாளையம், எடையநல்லூர், சிவகுமார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
News February 4, 2026
கிருஷ்ணகிரி: பழைய காதலால் பறிபோன உயிர்!

பீகாரை சேர்ந்த சனில்குமார் (20) நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வந்ததால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இவர் கடந்த 2-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 4, 2026
ஓசூரில் விமான நிலையத்துக்கு ஒப்புதல்?

ஓசூரில் விமான நிலைய திட்டம் தொடர் திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் நேற்று (பிப்.3) நடந்த பாராளுமன்ற தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், டெல்லி IGI விமான நிலையத்திலிருந்து நொய்டா வெறும் 90 கி.மீ தொலைவில் அமையும் போது, ஓசூருக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். ஓசூரில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார். உங்க கருத்து என்ன?


