News January 24, 2026

மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 30, 2026

மயிலாடுதுறை: விபத்தில் ஒருவர் பலி

image

செம்பனார்கோயில் ஆறுபாதி பாலவெளியை சேர்ந்தவர் வீராசாமி. தனியார் கல்லூரியில் கேண்டின் நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் கேண்டினில் இருந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்ற போது, பாலவெளி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கல்லூரி மாணவர் வெற்றிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், வீராசாமி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 30, 2026

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(ஜன.31) நடைபெற உள்ளது. இதன் காரணமாக பொறையார் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனவும் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!