News January 24, 2026
குமரி: பொங்கல் விழாவில் தகராறு – இளைஞர் பலி

சரலூரைச் சேர்ந்த ரமேஷ், இவரது நண்பர் மணிகண்டன் சேர்ந்து ஜன.15 அன்று நடந்த பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து முகேஷ் கண்ணன் என்பவரிடம் கேட்க சென்றனர். அப்போது முகேஷ் கண்ணன் அரிவாளால் ரமேஷ் (ம) மணிகண்டனை வெட்டினார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் GH-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு இரட்டைக் கொலை வழக்காக மாறியுள்ளது.
Similar News
News January 31, 2026
குமரியில் ரோந்து அதிகாரிகள் விபரம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (31.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News January 31, 2026
குமரி: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


