News January 24, 2026

தி.மலைக்கு வந்தது அலெர்ட்!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஜன.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தி.மலைக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களுக்கான விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

தி.மலை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

தி.மலை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

தி.மலை: கோயிலுக்கு வந்தவர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் குண்டூர் பிரம்மம்காரி தெருவைச் சேர்ந்தவர் தோட்டா சத்ய நாராயணா(55). நிதி நிறுவன அதிபரான இவர், நேற்று முன் தினம் தனது நண்பட்ர்களுடன் சிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது புதுமல்லவாடி கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது இவரது கார் மோதியது. இதில் பலத்த பாயமடைந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமகா உயிரிழந்தார்.

News February 17, 2026

தி.மலையில் பரிதாப பலி!

image

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(45). இவரது மகன் கனிஷ்(18), சென்னையில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரை சென்னைக்கு பஸ் ஏற்ற பைக்கில் பஸ் நிலையம் நோக்கி சென்றார். பைக்கை கனிஷ் ஓட்டினார். அப்போது, திண்டிவனம் சாலையில் பின்னார் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். தொடர்ந்து, கனிஷ் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!