News January 24, 2026
மதுரை: மகன் கண்முன்னே தாய் பலியான சோகம்.!

திருப்பரங்குன்றம் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி . நேற்று இவரது மகன் கொப்பையன் டூவீலரில் பின்னால் அமர்ந்து திருமங்கலம் சாலையில் சென்றுள்ளார். அப்போது கற்பகநகர் வேகத் தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது, மீனாட்சி தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.
Similar News
News March 8, 2026
மதுரை: வாடகை வீட்டில் இருப்போர் தெரிந்து கொள்ளவும்

மதுரை மக்களே; நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க
News March 8, 2026
மதுரை: 800 போட்டிகளில் பிடிபடாத காளை மரணம்

பாலமேடு, பொம்மிநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை ‘சண்டியர்’ வயது முதிர்வால் இறந்தது. 24 ஆண்டுகளாக பல இடங்களில் நடந்த 800-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பிடிபடாத காளையாக பல பரிசுகள் வென்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது. காளைக்கு கிராம மக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
News March 8, 2026
மதுரையில் அரிவாள் வெட்டு; சிறுவன் கைது

மதுரையை சேர்ந்த முனியாண்டி (52) வீட்டின் அருகே 17 வயது சிறுவன் குடிபோதையில் ரகளை செய்தார். இதை அவர் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த சிறுவன் அரிவாளை எடுத்து வந்து முனியாண்டியை சரமாரியாக வெட்டினார். முனியாண்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


