News January 24, 2026
ஜன.27-ல் ஜன நாயகன் வழக்கில் தீர்ப்பு

‘ஜன நாயகன்’ பட சென்சார் வழக்கு தொடர்பாக ஜன.27 காலை 10.30 மணிக்கு சென்னை HC தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாது, விஜய் ரசிகர்களும் குஷியில் உள்ளனர். ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால் பிப்ரவரி 2-வது வாரத்திலேயே ஜன நாயகன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
பேனரை கழற்றிய போலீஸை சாடிய பிரேமலதா

பேனரை கழட்டி வைத்துவிட்டால், தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியாதா என பிரேமலதா கேள்வி எழுப்பினார். தென்காசியில் பேசிய அவர், போஸ் என பெயர் வைத்துவிட்டு, கேப்டன் கட்சியிடம் இப்படி செய்தால் உங்களுக்கு தான் கெட்டப்பெயர் வரும் என்றும், ஒரு சிலரின் நடவடிக்கையால் மொத்த போலீஸ் டிபார்மெண்ட்டுக்கும் கெட்டப்பெயர் என்றும் சாடினார். மேலும், பேனரை கழற்றினால் மட்டும் தேமுதிகவை அழிக்க முடியாது எனவும் கூறினார்.
News January 30, 2026
முதல் விருதால் விஷ்ணு விஷால் உருக்கம்!

’ராட்சன்’ படத்திற்காக 2018-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருதை நடிகர் விஷ்ணு விஷால் பெற்றுள்ளார். இந்நிலையில் தனது X-ல், சினிமாவில் தான் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் அதேநாளில், எனது முதல் விருதை பெறுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்றும், தான் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 30, 2026
மகாத்மா காந்தி பொன்மொழிகள்

*ஒருவனின் தூக்கமும், துக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான். *ஒரு மனிதனின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் எழுகிறதோ, அந்த கணமே எல்லாமே கறைப்பட்டுவிடும். *உங்களை கண்டுபிடிக்க சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதே. *கூட்டத்தில் நிற்பது எளிது, ஆனால் தனியாக நிற்க தைரியம் தேவை. *இந்த உலகில் மனிதனின் தேவைக்கான வளங்கள் அனைத்தும் உள்ளன. ஆனால், பேராசையளவுக்கு வளங்கள் இல்லை.


