News January 24, 2026
PM கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு அழைப்பு

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,503 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4817 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு.
Similar News
News February 1, 2026
தேனி : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தேனி: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
தேனி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

கடமலைக்குண்டு போலீசார் நேற்று (ஜன.31) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த மணிகண்டன் (20) என்பவரை சோதனை செய்தனர். அப்பொழுது அவர் மூன்று கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


