News January 24, 2026

சென்னை: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மணி யாதவ் (34). இவர் நேற்று முன்தினம் மாலை மந்தைவெளி கோழிப்பண்ணை மைதானம் அருகே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்தார். பட்டினப்பாக்கம் போலீசார் இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

சென்னை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

சென்னை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

சென்னை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் ஆப்பை<<>> அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

கோயம்பேட்டில் தக்காளி கிலோ. 6-க்கு விற்பனை!

image

கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.

error: Content is protected !!