News January 24, 2026
நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்

சனே டகாய்ச்சி, ஜப்பான் பிரதமராக பதவியேற்ற 3 மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த பெரும்பான்மை உள்ளதால், ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிக்க இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
Similar News
News January 30, 2026
BREAKING: கடன் தள்ளுபடி.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

2026 தேர்தலையொட்டி அதிரடியான வாக்குறுதிகளை EPS அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, குலவிளக்கு திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000, பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க ₹25,000 மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தற்போது அவர் அறிவித்துள்ளார்.
News January 30, 2026
மறைந்த பின் ரோபோ சங்கருக்கு கவுரவம்.. உருக்கம்

தந்தைக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கெளரவம் கோடிகளில் சிலருக்கு தான் கிடைக்கும் என்பார்கள். அப்படியானால் அந்த கோடியில் ரோபோ சங்கரும், அவருடைய மகள் இந்திரஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில், TN அரசின் சிறந்த காமெடி நடிகர், நடிகைக்கான விருது இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெளரவத்தை பிரபலங்கள் பலரும் வாழ்த்த, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இந்திரஜா நெகிழ்ந்துள்ளார்.
News January 30, 2026
விஜய் பற்றி பேச EPS-க்கு தகுதியில்லை: KAS

தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு EPS-க்கு இல்லை என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், EPS எப்படி முதல்வரானார் என்று எல்லோருக்கும் தெரியும். எனவே, விஜய் பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என கடுமையாக சாடினார். மேலும், திமுக – தவெக இடையேதான் போட்டி என குறிப்பிட்ட அவர், EPS தலைமையில் MLA, MP, உள்ளாட்சி என எல்லா தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே அதிமுக சந்தித்துள்ளதாகவும் கூறினார்.


