News May 7, 2024

வாக்கு எண்ணும் மையம்: விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News February 3, 2026

விழுப்புரம்: காதல் திருமணம் செய்த பெண் சாவு!

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவ ஜெசிப்பிரியா(22), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(22) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜன.31ஆம் தேதி ஜெசிப் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.2) காலை ஜெசிப்பிரியா குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வசந்தராஜ் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தினர்.

News February 3, 2026

விழுப்புரம்: ரயில் சேவையில் மாற்றம்!

image

திண்டிவனம் – மயில இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண்:66045) வருகிற 5,7,10 தேதிகளில் திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும். அதே போல வண்டி எண்: 66046, விழுப்புரம் – திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News February 3, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!