News January 24, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 26, 2026
சேலத்தில் டாஸ்மாக் மது விற்பனை 20% அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கடைகள் மூடப்படுவதால், மதுப்பிரியர்கள் நேற்று முன்தினமே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
சேலம்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

சேலம் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
சேலம்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

சேலம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0427-2450023 தெரிவியுங்க. (SHARE பண்ணுங்க)


