News January 23, 2026
தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள்.. புதிய தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், தி.மலையில் இருந்து செய்யாறு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், தஞ்சையில் இருந்து கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்தன்று (ஜன.26) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 9, 2026
KKR Vs LSG போட்டியில் மழை அச்சுறுத்தல்

IPL-ல் இன்று KKR, LSG அணிகள் கொல்கத்தாவில் மோதுகின்றன. ஏற்கெனவே KKR Vs PBKS போட்டி மழையால் ரத்தான நிலையில், இன்றைய போட்டியிலும் மழைக்கு 90% வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மழை பெய்ததன் காரணமாக ஆடுகளம் தார்பாய் போட்டு மூடப்பட்டதால் வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபடவில்லை. ஆடுகளம் ஈரப்பதமாகவே இருந்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கும் அல்லது ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
News April 9, 2026
தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

மகாராஷ்டிராவின் பாராமதி இடைத்தேர்தல் ரேஸில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அஜித் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான இன்று மீதமுள்ள 30 சுயேச்சைகளையும் வாபஸ் பெற வைக்க NCP பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
News April 9, 2026
தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு..

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி, 4,969 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், 2,467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும்.


