News January 23, 2026
சட்டப்பேரவையில் உதயகுமார் Vs ரகுபதி வார்த்தை போர்

சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து EX அமைச்சர் உதயகுமார் மற்றும் அமைச்சர் ரகுபதி இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் உதயகுமார் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, இந்தியாவிலேயே குற்ற சம்பவம் குறைவாக நடப்பது தமிழகத்தில் தான் என விளக்கமளித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
முருகர் பாடலுக்காக விஜய் மீது புகார்

முருக பக்திப் பாடலை இழிவுப்படுத்தியதாக <<19028273>>விஜய்<<>> மீது இந்து முன்னணி புகாரளித்துள்ளது. தவெக 3-ம் ஆண்டு விழாவில் ’மருதமலை மாமணியே’ பாடலை வேல்முருகன் பாடியிருந்தார். இதில் ‘வருவாய் வேலையா’ என்பதற்கு பதில், ‘தளபதியே வருவாய்’ என பாடியிருந்தார். இதனால், முருக பக்தர்கள் கேலிக்கு உள்ளாவதாக கூறி, வேல்முருகன், விஜய், ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை ஆணையரிடம் ஆன்லைனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
BREAKING: தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹22,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால், இன்று மீண்டும் சற்று உயரத் தொடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை $250.46 வரை (இந்திய மதிப்பில் ₹22,633) உயர்ந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
News February 3, 2026
பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவுக்கு வரி குறைவு

மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியைவிட <<19035190>>இந்தியாவுக்கான வரி<<>> வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக US-விற்கு நெருக்கமான பாக்., வங்கதேசத்தை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில்(50%), சீனா(37%), வியட்நாம்(20%), வ.தேசம்(20%), இலங்கை(20%), பாக்.,(19%) உள்ளிட்ட நாடுகளைவிட வரி குறைவு(18%) என்பதால், இந்தியா – US இடையேயான வர்த்தகம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


