News January 23, 2026
நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதத் தொடக்கத்திலிருந்து சரிவடைந்து வந்த முட்டை விலை, தற்போது 5 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 2, 2026
ராசிபுரம் அருகே கோர விபத்து: இரு பெண்கள் பலி!

ராசிபுரம் அருகே பாச்சலைச் சேர்ந்த சண்முகம், தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஒரே டூவீலரில் காளிப்பட்டி கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரிமளா மற்றும் சுதா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சண்முகம் மற்றும் இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News February 2, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள, அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களும், இன்று (2-2-26) திங்கட்கிழமையும், நாளை (3-2-26) செவ்வாய்க்கிழமையும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளனர். தகுதியுள்ள பயனாளிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.


