News January 23, 2026

நெல்லை: பைக், கார் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

image

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு க்ளிக் செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 8, 2026

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சுரேந்திரன்(20). தொழிலாளியான இவரை நேற்று இரவு ஒரு கும்பல் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கல்லால் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் முகத்தில் படுகாயமடைந்த சுரேந்திரன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 8, 2026

நெல்லை: போலீஸ்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

களக்காடு அருகே சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த கலைச்செல்வன்(34) நெல்லை மாநகரில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் 2024-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆனந்த கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News February 8, 2026

நெல்லை: கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது

image

திருக்குறுங்குடி போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதூர் அருகே நின்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் (32), நம்பிராஜா (23), இசக்கி ராஜா (28) ஆகிய 3 பேரை பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!