News January 23, 2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன்

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். இதில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி எனவும், இதற்காக வேலைகளை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ஸும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார். மோடி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News January 30, 2026
தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண்: (06003) தாம்பரத்திலிருந்து வரும் ஜன.31 ந்தேதி இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மேலும் இந்த ரயிலில் படுக்கை வசதி இல்லை என்றும் முழுவதும் அமர்ந்து செல்லும் வகையிலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின்” நலன் காக்கும் நாள் கூட்டம் ‘ஜனவரி 30 காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.
News January 30, 2026
செங்கை: கிரகப்பிரவேசம் செய்த வீடே எமனானது

திருக்கழுக்குன்றம் வகாப் நகரைச் சேர்ந்த மின் ஊழியர் பிரபு, நாவலூர் பகுதியில் புதிதாக வீடு கட்டி சமீபத்தில் குடியேறினார். இதற்காக வாங்கிய அதிகப்படியான கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த அவர், ஜன-28 தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பவானி அளித்த புகாரின் பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


