News May 7, 2024
செங்கல்பட்டு, முதலை வங்கியின் அம்சங்கள்!

3.2 ஹெக்டர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டில் அமைந்துள்ள முதலைகள் வங்கி 1976 ஆம் ஆண்டில் ஜெர்மன் உயிரியலாளரான ரோமுல்ஸ் வைட்டகரால் நிறுவப்பட்டது. இதில், பரவலான இந்திய மற்றும் ஆப்ரிக்க முதலைகள், கடற்பாசிகள், ஆமைகள் மற்றும் பாம்புகள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இங்குள்ள முதலைகளுக்கு அதற்கேற்ற வாழ்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 2400 ஊர்வனங்கள் இந்த வங்கிகள் உள்ளன.
Similar News
News September 26, 2025
செங்கல்பட்டு வரும் விஜய்

தவெக தலைவர் விஜய் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் அக்.25ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக பிப்ரவரி-21-2026 ம் தேதி சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (SHARE)
News September 26, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் செல்லும் போது வெளிச்சம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே மழை பொழியும் நேரங்களில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
News September 26, 2025
செங்கல்பட்டு: திருமணம் செய்ய போகும் பெண்களின் கவனத்திற்கு

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.