News January 23, 2026

ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

Similar News

News January 26, 2026

இராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோவில் (பிப்.01) ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என்று திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த நேரத்தில் வருகை புரிவதை தவிர்க்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

இராம்நாடு: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?

image

இராம்நாடு மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க,
94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். *தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

ராமேஸ்வரம்: பாஜக பெண் ஓட்டிச் சென்ற டூவீரில் சீறிய பாம்பு

image

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஈஷா ஜெயந்தி. இவர் நேற்று தனது டூவீலரில் பஸ் நிலையம் நோக்கி கோவிலின் மேற்கு ரத வீதியில் சென்ற போது திடீரென வாகனத்தின் முன்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வாகனத்தை நிறுத்திய சம்யத்தில் பாம்பு கீழே விழுந்து ஊர்ந்தது. இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!