News January 23, 2026
கணவரை கொன்றுவிட்டு ஆபாச படம் பார்த்த மனைவி

ஆந்திராவின் குண்டூரில் <<18922752>>நிகழ்ந்த கொலை வழக்கில்<<>> திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி இருவரும் இணைந்து இந்த கொலையை அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவநாகராஜுவுக்கு பிரியாணியில் 20 தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரது சடலம் அருகே அமர்ந்து மனைவி ஆபாச படம் பார்த்து மகிழ்ந்துள்ளார். அட கொடுமையே..!
Similar News
News February 7, 2026
அதிமுக-பாஜக கூட்டணிக்கு OPS, சசிகலா ஆதரவு: தினகரன்

OPS மற்றும் சசிகலா தனி பாதையில் செல்லமாட்டார்கள் என TTV தினகரன் உறுதியாக கூறியுள்ளார். அவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதகமும் ஏற்படாது என்ற அவர், அதிமுக-பாஜக வெற்றிக்காக அவர்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். EPS-ன் எதிர்ப்பால் OPS-ம், சசிகலாவும் NDA-வில் இணைய வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட நிலையில், TTV இப்படி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்படுத்தியுள்ளது.
News February 7, 2026
Epstein Files-ல் சிக்கிய பிரபல இந்திய இயக்குநர் இவரா?

உலகம் முழுவதையும் உலுக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில், ‘Bollywood Guy’ என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இது பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தான் என பலரும் கூறிவந்த நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் நான் சென்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பீஜிங்கிற்கு தான் இதுவரை சென்றதே இல்லை எனவும், எனவே இதுபோன்ற விஷயங்களை நம்பவேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News February 7, 2026
மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்குகிறாரா ராமதாஸ்?

தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மனைவி செளமியாவை களமிறக்க அன்புமணி திட்டமிட்டுள்ளாராம். இதனால், அதே தொகுதியில் மகள் காந்திமதியை இறக்க ராமதாஸ் காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் மருமகள் vs மகள் போட்டி அனல் பறக்கும் என தைலாபுர வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


