News January 23, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 மாறியது

தங்கம் விலை உயர்வை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று (ஜன.23) உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹20 அதிகரித்து ₹360-க்கும், கிலோ வெள்ளி ₹20,000 உயர்ந்து ₹3.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துகொண்டே வருவதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமாக உள்ளது.
Similar News
News February 3, 2026
தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம்

நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற Coconut Promotion Scheme திட்டம் குறித்து FM நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். *தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம் வழங்கப்படும். *உயர்தர தென்னை மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். *தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஹைடன்சிட்டி பிளான்டேஷன் முறை ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
ராகுல் நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்: கோயல்

அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். ராகுல் போன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்துவதாகவும், முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான அழுத்தங்களால் வணிக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் PM மோடி அடிபணிந்துவிட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News February 3, 2026
இனி குழந்தைகள் முன் இதை செய்யுங்கள்

ஆளாளுக்கு ஒரு போன் வைத்திருப்பதால், வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இல்லை. இப்படி செய்தால் உங்கள் குழந்தைகளும் அதையேதான் செய்வர். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு முன் கணவன்- மனைவி இருவரும் அமர்ந்து அன்றைய நாளை பற்றி டிஸ்கஸ் பண்ணுங்க. ஜோக் அடித்து சிரித்து மகிழ்ச்சியாக இருங்க. இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலை நன்றாக இருப்பதோடு, அவர்கள் உங்களுடன் பிணைப்பாகவும் இருப்பர். SHARE.


