News January 23, 2026
காஞ்சியில் 4 பேர் அதிரடி கைது!

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துரையை கடந்த 14-ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தித் தாக்கியது. பின்னர், அவரிடமிருந்து ‘ஜி-பே’ மூலம் 8,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு பாதியில் இறக்கிவிட்டுத் தப்பினர். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சய், பிரதீப் குமார், முகமது ரியாசுதீன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.
Similar News
News February 7, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகின்ற பிப்.8ஆம் தேதி அன்று தொகுதி-II மற்றும் தொகுதி–IIA க்கான எழுத்துத்தேர்வுகள் காலை மற்றும் மதியம் என இருவேளைகளிலும் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளதால் வழிகாட்டு முறையை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
News February 7, 2026
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்