News January 23, 2026
ஆண்டிபட்டியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தெய்வேந்திரன் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.
Similar News
News January 29, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 28.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 28, 2026
தேனி: கல்லூரியில் சேர ரூ.40,000 உதவித் தொகை!

தேனி மாவட்ட மக்களே.. உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே<
News January 28, 2026
தேனி : வீடு / சொத்து / குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<


