News January 23, 2026
கடலூர்: கஞ்சா கடத்தியவர் மீது பாய்ந்த குண்டஸ்

குள்ளஞ்சாவடி அருகே கடந்த டிச.28 ஆம் தேதி காரில் கஞ்சா கடத்தி சென்ற மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த கணேசன்(57) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, 375 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கணேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால, அவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
Similar News
News January 27, 2026
கடலூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 27, 2026
கடலூர்: அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.