News January 23, 2026
திருச்சி மைய நுாலகத்தில் செஸ் பயிற்சி முகாம்

திருச்சி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நுாலகத்தில் வரும் ஜன.25ம் தேதி மதியம் பகல் 2.30 மணி முதல் மாலை 4. மணி வரை, குழந்தைகளுக்கான செஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், தேசிய செஸ் பயிற்சியாளர் வெங்கட்ராமன் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
திருச்சி: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மன்னார்புரம் காஜாநகர் நேற்று மாலை ஆட்டோ சவாரி ஏற்றுவது தொடர்பாக, ஓட்டுநர்களான ராஜேஷ் கண்ணா – ரத்தினம் ஆகியோர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணா, ரத்தினத்தை அரிவாளால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 3, 2026
திருச்சி: 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நிஷாந்த் ஆண்டணி (13) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, நிஷாந்த் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 2, 2026
திருச்சியில் குவிந்த 663 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


