News January 23, 2026
மங்காத்தா கிளைமாக்ஸ சொல்லிடாதீங்க: VP

அஜித்தின் ‘மங்காத்தா’ இன்று ரீ-ரிலீஸாகிறது. இதனையொட்டி, மீண்டும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டு காட்சியளிக்கின்றன. இதனிடையே, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஷூட்டிங்கின்போது அஜித் – விஜய் ஆகிய இருவருடனும் இணைந்து எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அத்துடன், கிளைமாக்ஸை யாரும் சொல்லிவிடாதீர்கள் என்றும் அவரே அவரை கலாய்த்துள்ளார். நீங்க எப்போ படம் பார்க்க போறீங்க?
Similar News
News March 20, 2026
Swiggy, Zomato டெலிவரி கட்டணம் உயர்ந்தது

எரிபொருள் விலை உயர்வு எதிரொலியாக Swiggy, Zomato நிறுவனங்கள் உணவு டெலிவரி கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இனி ஒவ்வொரு முறை உணவை ஆர்டர் செய்யும் போதும் கூடுதல் கட்டணமாக ₹2.40 செலுத்த வேண்டும் என Zomato தெரிவித்துள்ளது. அதேபோல, பிளாட்பார்ம் கட்டணத்தை ₹12.50-ல் இருந்து ₹14.90-ஆக Swiggy நிறுவனம் உயர்த்தியுள்ளது. இது ஆன்லைனில் அடிக்கடி உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
News March 20, 2026
வீட்டு சிலிண்டர்.. புதிய அறிவிப்பு வெளியானது

வீட்டு சிலிண்டர் உற்பத்தி 40% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் வர்த்தக நுகர்வோருக்கு 11,300 டன்கள் LPG விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவில் சிலிண்டர் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் தட்டுப்பாடு உள்ளதா?
News March 20, 2026
சற்றுமுன்: திமுகவிடம் CPI கேட்கும் தொகுதிகள்

திமுக கூட்டணியில் CPI-க்கு 5 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் போட்டியிட விரும்பும் 10 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சி அறிவாலயத்தில் வழங்கியுள்ளது. அதில், 1) தொண்டாமுத்தூர் 2) ஸ்ரீவில்லிபுத்தூர் 3) திருப்பூர் 4) பவானிசாகர் 5) பழனி 6) தளி 7) திருத்துறைப்பூண்டி 8) நாகை 9) வால்பாறை 10) சிவகங்கை ஆகிய தொகுதிகள் உள்ளன. 2021-ல் திருத்துறைப்பூண்டி, வால்பாறையில் CPI வெற்றி பெற்றது.


