News January 23, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர கோரிக்கைகள் குறித்து விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News January 26, 2026

பெரம்பலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 25, 2026

பெரம்பலூரில் வாகன பிரச்சாரத்தில் காவலருக்கு சிரமம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கொடியசைத்து, வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லக்கூடிய வாகனத்தில் உரிய இருக்கை வசதி இல்லாததால், பெண் போலீஸ் ஒருவர் அவதிப்பட்டு, துப்பாக்கியை பிடித்த நிலை உருவானது. பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

News January 25, 2026

பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!