News January 23, 2026

திருப்பூரில் சோகம்: ஓடும் பேருந்தில் உயிரை விட்ட நபர்!

image

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூபாய். இவர் திருப்பூர் குமார் நகரில் தங்கி அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல அரசு பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸுக்கு சக பயணிகள் தகவல் தெரிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாக ஆண்ட்ரூபாய் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Similar News

News January 23, 2026

சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம்

image

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், குன்னத்தூரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பொதுமக்களின் அவதியை போக்க அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, குடிநீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

News January 23, 2026

திருப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்

image

திருப்பூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News January 23, 2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!