News January 23, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 589 ▶குறள்: ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். ▶பொருள்: ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
Similar News
News January 29, 2026
UGC புதிய விதிமுறைகளுக்கு SC தடை

உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜன.14-ம் தேதி புதிய விதிமுறைகளை UGC வெளியிட்டது. இதை திரும்ப பெற வலியுறுத்தி SC-ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கை விசாரித்த SC, விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறி ரத்து செய்துள்ளது. மேலும், ஏற்கெனவே இருந்த விதிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.
News January 29, 2026
394 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 394 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீஷியன், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://iocl.com/apprenticships தளத்தில் பிப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
News January 29, 2026
தைப்பூசம் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள்

தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர்- நெல்லை இடையேயான சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் பிப்.1 இரவு 11.35 மணிக்கு அந்த ரயில் புறப்படும். இதேபோல், தாம்பரம் – தூத்துக்குடி இடையேயான ரயில் ஜன.31 இரவு 11.50 மணிக்கு புறப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் பிப்.1 இரவு 11.55 மணிக்கு புறப்படும். உடனே முன்பதிவு பண்ணுங்க!


