News January 23, 2026
பள்ளி மாணவர்களே பரிசுகளை அள்ளுங்க.. சூப்பர் சான்ஸ்!

மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கலைப் போட்டிகளை தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044 – 28192152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். என்ன மாணவர்களே, ரெடியா!
Similar News
News January 28, 2026
திருவாரூர் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.28) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மேலவாசல், எடகீழியூர், சோனாப்பேட்டை, வடுவூர், ராமகண்டியர் தெரு, எடமேலையூர், கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, செட்டிசத்திரம், மணக்கால்கொடவாசல், திருவிடச்சேரி, மணலகரம், காங்கேயநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News January 28, 2026
அரசு லேப்டாப்பை ஆன்லைனில் விற்கும் மாணவர்கள்!

தமிழக அரசின் இலவச லேப்டாப்களை சிலர் ₹10,000 – ₹20,000 வரை ஆன்லைனில் விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு லேப்டாப் மிகவும் முக்கியம் என்பதால், லேப்டாப்களை அவர்கள் விற்பனை செய்வதை தடுக்கும்படி அரசுக்கு பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி துவக்கி வைத்தார்.
News January 28, 2026
ஜன நாயகன்.. எதிர்பாராத அதிரடி திருப்பம்

‘ஜன நாயகன்’ வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்துள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர் பராசரனுடன் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்த வழக்கையே வாபஸ் பெற்று மறு ஆய்வுக் குழுவுக்கு (RC) அனுப்ப படக்குழு திட்டமிடுகிறதாம். இவ்வாறு நடந்தால், அடுத்த 2 வாரங்களில் சான்றிதழ் பெற்று தேர்தலுக்கு முன்பு படத்தை வெளியிடலாம் என கூறப்படுகிறது.


