News January 22, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு அப்டேட்

image

<<18909138>>ஜன நாயகன் மேல்முறையீட்டு<<>> வழக்கில் 2 நாள்களுக்குள் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என தவெக வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால், இவ்வழக்கு மெட்ராஸ் HC உத்தரவு பிறப்பிப்பதற்காக இதுவரை பட்டியலிடப்படாமல் உள்ளது. சனி, ஞாயிறை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை (ஜன.26) வருவதால் ஜன.27-ல் தீர்ப்பு வழங்கப்படலாம். அதன்பிறகே, ஜன நாயகன் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News April 7, 2026

ராகுலுக்கு வயநாட்டில் வீடு உள்ளதா? சீமான்

image

சீமான் போட்டியிடும் காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று <<19577448>>கார்த்தி சிதம்பரம்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், நான் அனைத்து தமிழ் மக்களின் செல்ல மகன் என சீமான் பதிலளித்துள்ளார். மேலும், கேரளாவில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஓட்டும், வீடும் அங்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். எனவே, இந்த வீண் பேச்சையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார்.

News April 7, 2026

3 நாள்கள் பள்ளிகள் விடுமுறை..

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.9-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதனையொட்டி ஏப்.8, 9, 10 ஆகிய 3 நாள்கள் அரசு & தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேவையற்ற தேர்தல் பதற்றங்களை தவிர்க்கும் நோக்கிலும், மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

IPL போட்டிகளை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

image

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை கருதி சென்னையில் நடக்கவுள்ள IPL போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை HC தள்ளுபடி செய்துள்ளது. யூகத்தின் அடிப்படையில் தொடர்ந்த இந்த வழக்கை ஏற்க முடியாது என கூறிய கோர்ட், ஏற்கனவே முடிந்த IPL போட்டியில் விதிமீறல் நடக்கவில்லை என தெளிவுப்படுத்தியது. இதனால் 2-வது போட்டியையும் கண்டுகளியுங்கள் எனக் கூறி இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

error: Content is protected !!