News May 7, 2024
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் நிறுத்தம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து 3ஆவது முறையாக இன்று காலை அவர் விண்வெளிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், அவர் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பு அவரது பயணம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Similar News
News August 23, 2025
விஜய் பேச்சுக்கு நோ கமெண்ட்ஸ்.. அமைச்சர் ரகுபதி

திமுக, அதிமுக, நாதக, பாஜகவை கடுமையாக அட்டாக் செய்ய விஜய் தொடங்கிவிட்டார். இந்நிலையில், எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை விஜய்யே தேடி பார்த்து சொல்லட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை விஜய் விமர்சனம் செய்வது அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான்; ப்ரோவாக இருந்தாலும், அங்கிளாக இருந்தாலும் அவர் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.
News August 23, 2025
BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வந்த நிலையில், இன்று ஒரே அடியாக ₹800 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹800 உயர்ந்து ₹74,520-க்கும், கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹9,315-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News August 23, 2025
ஓரமாக நின்ற அண்ணாமலை.. ரிப்போர்ட் கொடுத்த நயினார்?

ஏற்கெனவே அண்ணாமலையை ஓரங்கட்டுவதாக TN பாஜக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், நயினாரின் தேநீர் விருந்துக்காக சென்ற அண்ணாமலை தனியாக நின்று கொண்டிருந்தாராம். இதை கவனித்த அமித்ஷா, அவரை அருகே அழைத்துள்ளார். நயினார் உள்பட மூவரும் விருந்தில் பங்கேற்ற பின்பு தனித்தனியாக ஆலோசித்துள்ளனராம். இதனிடையே, அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டி பணிகள் முழுமையடையவில்லை என நயினார் BL சந்தோஷிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம்.