News January 22, 2026

கவர்னர் மாளிகை லோக் பவன் அல்ல; லோக்கல் பவன்: DMK MLA

image

சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவமதிக்கப்பட்டதாக <<18904228>> கவர்னர் மாளிகை<<>> அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின்போது, கவர்னர் குறித்து கடுமையான விமர்சனங்களை திமுக MLA பரந்தாமன் முன்வைத்தார். அப்போது பேசிய அவர் கவர்னர் மாளிகையை ‘அது லோக் பவன் அல்ல, லோக்கல் பவன்’ என விமர்சித்தார்.

Similar News

News January 30, 2026

சிறுத்தையுடன் சண்டை செய்து மகனை காப்பாற்றிய தந்தை!

image

குஜராத்தில் 60 வயது தந்தை ஒருவர் சிறுத்தையை கொன்று தனது மகனை காப்பாற்றியுள்ளார். தனது வீட்டில் அமர்ந்திருந்த பாபுபாய் என்பவரை திடீரென சிறுத்தை தாக்கியது. தனது தந்தையின் சத்தம் கேட்டு அவரது மகன் ஷர்துல்(27) வெளிய வர, அவர் மீது பாய்ந்தது. இதனை கண்ட பாபுபாய் உடனடியாக அருகிலிருந்த ஈட்டியால் சிறுத்தையை கொன்று தனது மகனை காப்பாற்றினார். காயமடைந்த இருவரும் தற்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 30, 2026

EPFO: கட்டாயச் சம்பள உச்சவரம்பு ₹25,000?

image

ஊழியர்களின் EPFO கணக்கிற்கு பங்களிக்கப்படும் கட்டாயச் சம்பள உச்சவரம்பு ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2014-ல் இந்த வரம்பு ₹6,500-லிருந்து ₹15,000-ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், தனியார் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.

News January 30, 2026

ரஷ்யா செல்கிறாரா ஜெலன்ஸ்கி?

image

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மீண்டும் மாஸ்கோவிற்கு அழைத்துள்ளது. இருப்பினும், அவரிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் ரஷ்யா விடுத்த அழைப்பை ஜெலன்ஸ்கி நிராகரித்திருந்தார். மேலும், தனது நாட்டின் மீது ஏவுகணைகளை வீசும் நாட்டிற்கு தான் செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

error: Content is protected !!